திரு சிற்றம்பலம் வடிவேல் (இவர் ஷெல் வீச்சில் இடது கையில் மூண்டு விரல்களை இழந்தவர்) அவர்களுக்கு தேவையான, தோட்டம் செய்வதற்கான தண்ணீர் இறைப்பதற்கான இயந்திரம் மற்றும் வேலிக்கான முட்கம்பி என்ற பொருட்களை திரு முகமத் உசைன் என்பவறின் வன்பொருள் வணிகத்தில் வாங்கினோம். ருபாய் 85,000 பெறுமதியான இயந்திரத்தை நான் வாழ்வாதாரம் தொடர்பான செயல் என்று கூறி குறைத்து தருமாறு கேட்டவுடன் ரூபாய் 64,000 இற்கு பெருமனதோடு வழங்கினார் திரு உசைன். முட்கம்பி, குழாய் போன்ற மற்ற பொருட்களையும் வாங்கி கொடுத்தோம். சிற்றம்பலம் வடிவேல் அவர்களின் துணைவியார் தாங்கள் ஏழ்மை நிலையில் இரு பிள்ளைகளை வளர்க்க படும் வேதனைகளை கூற மனம் பாரமாக இருந்தது. அவர்களுக்கு இந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரம் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி