8th March 2019 – Request from a mother of 4 children (who had lost her husband due to an accident) came recently, where she was looking for a livelihood support especially to meet the expenses incurred due to her son’s heart condition. Though operated, her 15 year old son Nitharsan had to be brought to hospital weekly for check up’s. Hence we decided to donate her with an advanced Sewing machine, so both herself & her daughter can derive a permanent income from the tailor shop. We were glad to be there to witness the opening of her location @ Jeyapuram, Killinochchi in Sri Lanka. Total donated amount was Rs 61,094. We heard that they are progressing well with Rs 25,000 monthly income. Thanks to Nivaranam Donors. You can always reach out to me, if you would like to donate to a valuable cause as such this!
கிளிநொச்சி ஜெயபுரத்தை சேர்ந்த கமலேஸ்வரி என்பவர் தன்னுடைய நிதர்சன் என்னும் 15 வயதுடைய மகனுக்கு இருதய நோயினால் (சத்திர சிகிச்சை முடிந்தும் சில பிரச்சனைகள்) தாங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், தங்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக தையல் நிலையம் ஒன்றினை அமைத்து தருமாறு என்னுடைய நிவாரண அமைப்பிற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இவரது கணவர் விபத்தொன்றில் அகால மரணம் அடைந்ததால் நான்கு பிள்ளைகளை வளர்க்க பெரும் சவால்களை எதிர் நோக்குகிறார் என்பதனை தெரிந்து கொண்டோம். அவரும் – அவரின் மூத்த மகளும் தையலில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதனால், அவர்களை கிளிநொச்சி நகரில் இருக்கும் Singer நிறுவனத்திற்கு அழைத்து சென்று நவீன தையல் இயந்திரத்தை வாங்கி கொடுத்து, பின் நேரிடையாக பெயர் பலகை தயாரிக்கும் இடத்திற்கு சென்று “திருவள்ளுவர் தையல் நிலையம்” என்ற பெயர் பலகையை தயாரிக்க வரைபடத்தினை ஒழுங்கமைத்துவிட்டு, கமலேஸ்வரியிடம் பணம் ரூபாய் 10,000 துணி வாங்குவதற்காக வழங்கி விட்டு வந்தோம் (மொத்தமாக ரூபாய் 61,094) . சில நாட்களுக்குப் பின் திருவள்ளுவர் தையல் நிலையம் திருந்து வைக்கப்பட்டு அவரின் மூத்த மகளும் அவருமாக ஆடைகள் தைத்து வருமானத்தை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். தற்பொழுது, அவர்களின் கடும் உழைப்பினால் மாதாந்த வருமானமாக ரூபாய் 25,000 வரை உழைப்பதாக கேள்விப்பட, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. #MGR101 இசைநிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட நிதியில் இருந்தே இந்த உதவியை செய்ய கூடியதாக இருந்தது என்பதனை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம். பங்களித்த உள்ளங்கள் அனைவர்க்கும் நன்றி! சகோதரி கமலேஸ்வரி குடும்பம் செழுத்து வாழ இறைவனை வேண்டுவோம். *
Nitharsan Lokeswararaja – Tailor Shop
- Home / Projects / Livelihood Assistance /
- Nitharsan Lokeswararaja – Tailor Shop