24th Feb 2019 – Thanks to Sasi & Siva from Markham Canada for their donation of $1000.We purchased a Cow & a calf to help out Esvary Srikanthan from Puthukudiyiruppu, Mullaitivu who lost her husband in the war & has been struggling to raise her 3 children. With this assistance, she will be able to undertake the expenses related to sending her son to the University this year. We also provided goats to the family of Sivapiragasam K from Kiran, Batticaloa. The breadwinner can’t walk or stand for long time as he had a knee injury during the war. Again the family was struggling to meet their ends meet with 4 children. Thanks again to Sasi & Siva for regularly contributing to my charity Nivaranam.
யுத்தத்தில் கணவனை இழந்த சகோதரி ஈஸ்வரி ஸ்ரீகந்தன் (புதுக்குடியிருப்பு, முல்லைதீவு) தனது மூன்று பிள்ளைகளை வளர்க்க சிரமப்படுவதாக அறிந்தோம். அதுவும் மூத்த மகன் பல்கலைக்கழக படிப்புக்கு தெரிவாக உள்ள நிலையில், அவருக்கான மாதாந்த செலவுக்கு ரூபாய் 10,000 தேவைப்படுவதாகவும் எங்களுடன் தொடர்பு கொண்டு வாழ்வாதாரம் ஒன்றை கேட்டிருந்தார். இவருக்கு நல்ல பசுவும் – கன்றும் ரூபாய் ஒரு லட்சம் செலவில் வழங்கி உள்ளோம். இதே வேலை கிரான்- மட்டக்களப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் கதிர்காமத்தம்பி என்பவரும் போரினால் வலது கால் சில் பகுதியில் அடிபட்டு, வேலைக்கு செல்ல முடியாது 4 பிள்ளைகளை வளர்க்க பெரும் சிரமத்திற்கு உள்ளாகி, எங்கள் நிறுவனத்தை நாடி, ஆட்டு குட்டிகளை வாழ்வாதாரமாக கேட்டிருந்தார். அவருக்கு ரூபாய் 50,000 செலவில் அவர் கேட்ட வாழ்வாதாரம் வழங்கப்பட்டு விட்டது. இந்த இரண்டு வாழ்வாதாரத்திற்கு $1000 ஐ நன்கொடையாக வழங்கிய தமிழ் இன உணர்வாளர்களான திரு திருமதி சிவகுமார் ஆகியோருக்கு அந்த இரு குடும்பங்களின் சார்பில் வாழ்த்துக்கள்!!