Thanks to Jeyanthy Lepagaran’s family for donating Rs 1 lakh ($791) during their musical program yesterday. Our latest beneficiary is Pukalavan who lost his right arm during the 2009 war and also lost his father, mother, sister & brother-in-law all due to the indiscriminate shelling by Sri Lankan armed forces at that time. He was an ex-cadre and have been facing challenges to find a permanent income to support his family. After hearing his story, I tried to help him at 3 different times with financial assistance but all were diverted to those whom he had identified as suffering even worse than him. He certainly has a big heart. When Jeyanthy called to invite me for her musical show, she also wanted to find me a suitable beneficiary to help with a livelihood assistance. The musical show was a treat for both ears & heart!
கிளிநொச்சியில் முன்னாள் போராளி புகலவனுக்கு ரூபாய் 1 லட்சம் செலவில் வாழ்வாதாரம். இறுதி யுத்தத்தில் வலக்கையினை இழந்ததோடு மட்டுமில்லாமல் இலங்கை ராணுவத்தின் அகோர எறிகணையில் தனது அப்பா, அம்மா, சகோதரி, சகோதிரியின் கணவர் என பல சொந்தங்களை இழந்த இவரிடமிருந்து எனக்கு வாழ்வாதாரத்துக்கு உதவும்படி வேண்டுகோள் வர, நானும் ஒவ்வொரு முறையும் இதற்கான ஏற்பாட்டினை செய்யும் போதெல்லாம் இவர், இன்னொரு அவலைப்படும் முன்னாள் போராளிக்கு அளிக்கும்படி அவர்களின் விபரத்தை கூறி தனக்கு வந்த சந்தர்ப்பத்தினை பிறருக்கு வழங்கிட்டது இவரது பெருந்தன்மையினை காட்டியது. இந்த நிலையில் கனடாவில் இருக்கும் லீபாகரன் குடும்பம் என்னை தங்கள் இசை நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கும் வேளையில், தாங்கள் ஒரு வாழ்வாதாரத்துக்கான நிதியினை தர போவதாக சொல்ல, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்து நல்ல ஆடுகளை (5) வாங்கி புகலவனுக்கு இந்த இசை விழா நடக்கும் முதல் நாளே வழங்கி இந்த புகைப்படங்களை திருமதி ஜெயந்தி லீபாகரனுக்கு அனுப்பியும் வைத்தேன். இசை விழா நன்றே நடந்தது. திருமதி ஜெயந்தி லீபாகரன் குடும்பத்திற்கு நன்றிகள். புகலவன் இந்த உதவியின் மூலம் மாதம் ரூபாய் 10,000 வருவாய் ஈட்டக்கூடியதாக இருக்கும். சிறுது காலத்தில் அவரின் முயற்சியில் இது பன்மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்!