Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the gd-system-plugin domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6114
Manjula – Nivaranam

What a way to start a life!! Yes, Sri Anna (Ariyalai) & his family whom I’ve known for many years has donated $780 (Rs 104,715) towards the Livelihood Assistance of Mrs Manjula Jeyakumar (Varani – Kodikaamam) who lost her right foot due to the war in Sri Lanka. The donation was handed over to me during their daughters wedding ceremony day before yesterday, which I forwarded it yesterday to Mrs Jeyakumar, so can buy a cow and get a permanent income from the sale of milk. Mrs Jeyakumar approached me a month ago asking for assistance as her hard working husband’s income wasn’t sufficient to meet their family’s needs. Blessings to Sinthuja Sri & Nimal for the donation!!! Happy married Life!!!

திருமண நிகழ்வில் வாழ்வாதாரம் வழங்கி வைப்பு!!
போரின் கொடுமையினால் தனது வலது பாதத்தை இழந்த மஞ்சுளா ஜெயக்குமார் (வரணி – கொடிகாமம்) என்னை தொலைபேசியில் அணுகி தான் படும் வேதனைகளை கூறினார். இரு பிள்ளைகளின் தாயாரான இவருக்கு மாத செலவு ருபாய் 30,000. இவரின் கணவரோ நல்ல உழைப்பாளி. அனால் மாத வருமானமோ ரூபாய் 20,000. இவரின் மூத்த மகன் கல்வி செலவுகளுக்கும் குடும்ப செலவுகளுக்கும் ஈடு செய்ய முடியாமல் தவித்த போதே என்னை அணுகினார். எனது செயற்பாட்டாளர் வாணன் அவர்களின் வீட்டிற்கு சென்று இவரின் நிலமைகளை கண்டறிந்து Assessment Report ஒன்றை எனக்கு அனுப்பி இவர் வீட்டோடு இருந்து ஒரு வருமானம் ஈட்ட மாடு ஒன்றை கொடுப்பதே சரி என்று எனக்கு கூறினார். Nov 9 ஆம் நடைபெற இருக்கும் “MGR 101” இசை நிகழ்வின் மூலம் சேரும் நிதியில் இவருக்கு வாழ்வாதாரம் வழங்கலாம் என்றிருந்தேன். அதற்குள் ஒரு இன்ப அதிர்ச்சி. அரியலையை சேர்ந்த கனடா வாழ் ஸ்ரீஸ்கந்தன் பரமநாதன் என்னை இரு தினங்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்த நாள் திருமணம் செய்ய இருக்கும் தனது மகள் சிந்து மற்றும் மணமகன் நிமல் சார்பில் ஒரு வாழ்வாதாரம் தர விரும்புவதாக கூறினார். ஸ்ரீ அண்ணா சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்த மனித நேயமிக்க மனிதர் – நல்ல எழுத்தாளர். நேற்று நடந்த திருமண நிகழ்வில் அன்பளிப்பினை வழங்கிய புதுமண தம்பதியினர் நீடூழி வாழ இறைவனை வேண்டுவோம்!!! இன்று $780 அனுப்பட்டும் விட்டது (ரூபாய் 104,715). விரைவில் மாடு வாங்கப்பட்ட அத்தாட்சியங்களை பதிவு செய்வேன்.
இப்படி ஒரு உதவி கிடைத்தால் அதனை தான் சரியாக பயன்படுத்தி பிள்ளைகளை முன்னேற்றுவேன் என்று மஞ்சுளா உறுதி அளித்துள்ளார். அவருக்கு தொடர்ச்சியாக உளரீதியான ஊக்கத்தை வழங்கி கொண்டேயிருப்போம்!! இரு குடும்பமும் ஒளிர்ந்தோங்க வாழ்த்துக்கள்!!